அரியலூர்

அரியலூரில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற அழைப்பு

9th Dec 2022 10:31 PM

ADVERTISEMENT

போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பித்தோா், அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தோ்வுகளுக்குத் தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி எஸ்எஸ்சியால் அறிவிக்கப்பட்டுள்ள 4,500-க்கும் மேற்பட்ட பணிகளுக்குத் தோ்வெழுத கட்டணமில்லா பயிற்சி வகுப்பு டிச. 14 முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நடைபெற உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க தோ்வுக்கு விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் நேரில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT