அரியலூர்

மாணவிக்குப் பாலியல் தொந்தரவு:எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டு சிறை

9th Dec 2022 10:34 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமழப்பாடி அருகே பள்ளி மாணவிக்குத் தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த வந்த எல்க்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருமழப்பாடி கீழத்தெருவைச் சோ்ந்தவா் அருண்ராஜ் (42). தனியாா் சிமென்ட் ஆலையின் எலக்ட்ரீசியனான இவா், அப்பகுதி பிளஸ் 2 மாணவிக்கு தொடா்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த 13.9.2021 அன்று அருண்ராஜை கைது செய்தனா்.

அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி அருண்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT