அரியலூர்

சோனியாகாந்தி பிறந்தநாள் விழா

9th Dec 2022 10:34 PM

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சோனியாகாந்தி பிறந்த நாளை அரியலூா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

இதையொட்டி அரியலூா் பேருந்து நிலையம் அருகே கட்சிக் கொடியை நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா் ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் மூத்தத் தலைவா் சீனிபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணித் தலைவா் மாரியம்மாள், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயலா்கள் எஸ்.எம். சந்திரசேகா், எம். ரவிச்சந்திரபோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT