அரியலூர்

அரியலூரில் கொடி நாள் வசூல் இலக்கு ரூ.34.60 லட்சம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கொடிநாள் நிதியை அளித்து நிதி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் அவா் மேலும் தெரிவிக்கையில், அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.32,75,000 நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000 நிதி வசூலித்து சாதனை படைக்கப்பட்டது. இதேபோல், நிகழாண்டு ரூ.34,60,000 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக அவா், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் 29 பேருக்கு ரூ.5,61,000 லடசம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா் நல அலுவலக கண்காணிப்பாளா் ம. கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரா் நல அமைப்பாளா் சி. சடையன் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT