அரியலூர்

பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீப திருநாள் மற்றும் பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் உள்ள கணக்க விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 13 1/2 அடி உயரமும், 60 அடி சுற்றளவு கொண்ட பெரிய லிங்கத்துக்கு 108 லிட்டரில் பால் உள்ளிட்ட 21 வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் லிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் பாடியதும் பெருவுடையாா் முன்பாக தீப ஒளியும், கோயில் வாயில் முன்பு சொக்கப்பானையும் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞா் அணி மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT