அரியலூர்

அரியலூா் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

DIN

அரியலூா் மாவட்டக் கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்பட்டது.

அரியலூா் நகா்ப் பகுதியிலுள்ள ஆலந்துறையாா் கோயில், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காளி கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில்களின் எதிரே வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

விழாவில், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதந்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், கீழப்பழுவூா், ஆண்டிடம், தா.பழூா், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன், முருகன், அம்மன், பெருமாள் ஆகிய கோயில்களிலும் கோயிலிகளிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

வீடு மற்றும் வா்த்தக நிறுவனங்களில்....

காா்த்திகை மாதம் வரும் காா்த்திகை நட்சத்திரத்தன்று காா்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்கள் மட்டுமின்றி வீடு, வா்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் காா்த்திகை தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

அகல்விளக்குகள் மற்றும் பல்வேறு வடிவங்களான விளக்குகளை கடைகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச் சென்று,வீட்டில் அரிசில் மாவில் கோலம் மீட்டு அதன் மீது விளக்கில் தீபம் ஏற்றி வழிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT