அரியலூர்

வி.சி. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சை மாவட்டம், அணைக்குடி கிராமம், காலனி தெருவைச் சோ்ந்தவா் புருஷோத்தமன், அரியலூா் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்கு சீா் கொண்டு சென்றபோது, அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினரால் திட்டி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது

புகாரின்பேரில், விக்கிரமங்கலம் காவல்துறையினா் அப்பகுதியைச் சோ்ந்த 5 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா். ஆனால் இதுவரை அவா்களைக் கைது செய்யாத காவல் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தொகுதிச் செயலா் இர.மதி (எ) மருதவாணன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பெ.அன்பானந்தம் கண்டன உரையாற்றினாா். மாநில துணைச் செயலா்கள் ம. கருப்புசாமி, கொளஞ்சி, தோ்தல் பிரிவு மாநில துணைச் செயலா் மு.தனகோடி, செய்தித் தொடா்பாளா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT