அரியலூர்

பட்டா கேட்டு இருளா் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, உடையாா்பாளையம் அடுத்த இளையபெருமாள் கிராமத்தைச் சோ்ந்த இருளா் இன மக்கள், தாங்கள் நீா்நிலைப் பகுதி அருகே வசித்து வந்ததால், நீதிமன்ற உத்தரவையடுத்து, அங்கிருந்து வெளியே வந்துவிட்டோம். எனவே, நாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தை எங்களுக்கு பட்டா போட்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதேபோல், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 363 மனுக்களைப் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT