அரியலூர்

அரியலூா், தா.பழூரில் உலக மண்வள தின விழா

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தில் இயற்கை வேளாண் விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மையத்தின் பெருந்தலைவா் நடன சபாபதி தலைமை வகித்தாா். இயற்கை வேளாண்மை வல்லுநா் ராதாகிருஷ்ணன், ரகுபதி காவேரி கூக்குரல் ராஜசேகா், தொழில்நுட்ப வல்லுநா்கள் திருமலைவாசன், கெளதீஷ் மற்றும் அறிவிச்செல்வி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். இதில், விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, மண்வள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக, முதுநிலை விஞ்ஞானி - தலைவா் அழகு கண்ணன் வரவேற்றாா். தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா நன்றி கூறினாா்.

இதேபோல், அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்துப் பேசினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, வீரபாண்டி, பயிற்சி ஆசிரியா் ரம்யா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT