அரியலூர்

அரியலூரில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரில் உள்ள அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில், இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நட்டுள்ள பாதயாத்திரை நினைவுக் கம்பத்தில் 12.12.2022-இல் கொடியேற்ற வரும் மாநில தலைவா் அழகிரிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வட்டாரத் தலைவா்கள் திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கா்ணன், கங்காதுரை, அழகானந்தம் , மாவட்ட இளைஞரணி தலைவா் புகழ்ராஜ், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பழனிச்சாமி, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக நகர தலைவா் மா.மு.சிவகுமாா் வரவேற்றாா். முடிவில் மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜசேகரன் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT