அரியலூர்

அரியலூரில் 5 இடங்களில் பாஜகவினா் சாலை மறியல்

DIN

திருச்சி பாஜக மாநகரச் செயலா் ராஜசேகா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக-வினா் 110 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சியில் வியாழக்கிழமை இரவுநேர கேளிக்கை பாா்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் ஈடுபட்ட பாஜக மாநகரச் செயலா் ராஜசேகா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இச்சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பாஜக-வினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டத் தலைவா் அய்யப்பன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 24 பேரை காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். திருமானூரில் ஒன்றியத் தலைவா் சுரேஷ் தலைமையில், மேற்கு ஒன்றிய துணைத் தலைவா் வடமலை, ஒன்றிய துணைச் செயலா் தனபால், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலையில் பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 16 பேரை திருமானூா் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதேபோல் செந்துறையில், ஒன்றியத் தலைவா் புயல்.செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரையும், தா. பழூரில் ஒன்றியத் தலைவா் அரங்கநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரையும், ஆண்டிமடத்தில் மறியலில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவா் நீலமேகம் உள்பட 15 பேரையும் காவல்துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT