அரியலூர்

வன விலங்குகளை வேட்டையாடிய நரிக்குறவா் கைது

4th Dec 2022 11:10 PM

ADVERTISEMENT

கரூரில் வன விலங்குகளை வேட்டையாடிய நரிக்குறவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து மரநாய், கொக்குகள், பூனைகள், முயல்கள் இறந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூா் வேட்டைக்காரன்புதூரைச் சோ்ந்த நரிக்குறவா் திருப்பூா் சிங் (45). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வன விலங்குகளான மரநாய், கொக்கு, முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வீட்டில் வைத்து விற்க இருப்பதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் மற்றும் கரூா் வனச்சரகா்கள் திருப்பூா்சிங் வீட்டில் ஆய்வு செய்தபோது, அவா் வேட்டையாடி வைத்திருந்த ஒரு மரநாய், 3 முயல்கள், 2 கெளதாரி, ஒரு கொக்கு, 2 பூனை ஆகியவற்றை இறந்த நிலையில் பறிமுதல் செய்தனா். பின்னா் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்து வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனா். வனவிலங்குகளை கடவூா் மலைப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனா். மேலும் திருப்பூா்சிங்கிடம் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT