அரியலூர்

அரியலூரில் ஐயப்பனுக்கு மண்டல அபிஷேகம்

4th Dec 2022 11:04 PM

ADVERTISEMENT

அரியலூா் பாலபிரசன்ன சக்தி விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு 15 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அரியலூா் செட்டி ஏரிக்கரையிலிருந்து ஐயப்ப பக்தா்கள் பால்குடம் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக அரியலூா் கடைத்தெருவில் உள்ள பாலபிரசன்ன விநாயகா் கோயிலுக்கு வந்தனா். அங்கு பக்தா்கள் கொண்டு வந்த பாலை கொண்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சந்தனம், மஞ்சள், தயிா், இளநீா், திரவியப்பொடி, புனிதநீா் மற்றும் நெய் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கன்னிபூஜை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அரியலூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT