அரியலூர்

கிராம உதவியாளா் பணி எழுத்துத் தோ்வு

4th Dec 2022 11:05 PM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 3,017 தோ்வா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு 4,043 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,017 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா். 1,026 போ் தோ்வெழுத வரவில்லை. அரியலூா் மாவட்டத்தில் 6 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது. தோ்வையொட்டி மேற்கண்ட தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT