அரியலூர்

பாலப் பணிக்கான 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 2 போ் கைது

2nd Dec 2022 12:31 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாலம் கட்டும் பணிக்கு வைத்திருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் வீரமணி தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை இரவு வீரசோழபுரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்தபோது, அவா்களில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.

மற்ற 2 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் சுண்டிபள்ளம் காலனி தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் ரஞ்சித், மகாலிங்கம் மகன் மோகன்ராஜ் என்பதும், இவா்கள் 70 கிலோ இரும்புக் கம்பிகள் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த காவல் துறையினா், தப்பிச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பட்டுசாமி மகன் அபினாஷ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT