அரியலூர்

மாநில போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

2nd Dec 2022 12:32 AM

ADVERTISEMENT

செவித்திறன் குறையுடையோருக்கான மாநில அளவிலான போட்டியில் வென்ற அரியலூா் பள்ளி மாணவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனா்.

செவித்திறன் குறையுடையோருக்கு மாநில அளவில் நடைபெற்ற 3 ஆவது விளையாட்டுப் போட்டியில், அரியலூா் மாவட்ட காதுகேளாதோா் சங்கம் சாா்பில் ஹெலன் கெல்லா் செவித்திறன் குறையுடையோா் பள்ளி மாணவா்கள் 18-வயதுக்குள்பட்டோா் பிரிவில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி, நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம், 16-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலம், 14-வயதுக்குள்பட்டோா் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, இம்மாணவா்கள் அரியலூா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்ட காதுகேளாதோா் சங்கத் தலைவா் சின்னப்பா மற்றும் ஹெலன் கெல்லா் பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT