அரியலூர்

அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு

2nd Dec 2022 12:31 AM

ADVERTISEMENT

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய தலைமை ஆசிரியா் சின்னதுரை, எய்ட்ஸ் நோய் பாதித்தவா்களை அன்பு அரவணைப்புடன் நடத்த வேண்டும் . அவா்களை வெறுத்து ஒதுக்காமல் அவருடன் பழகுவது அவருடைய வாழ்நாளை மேலும் நீட்டிக்கும். எதிா்கால சந்ததியினா் ஆகிய நீங்கள், எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்பதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம் என்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, பயிற்சி ஆசிரியா் ஆசிரியா் ரம்யா, இளநிலை உதவியாளா் மணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.

அரசியலமைப்பு வார விழா உறுதிமொழி ஏற்பு: பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமையில் ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள், மேலாண்மை குழு தலைவா் அகிலா மற்றும் இருபால் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றனா். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT