அரியலூர்

அரியலூரில் சமுதாய வளைகாப்பு

2nd Dec 2022 12:31 AM

ADVERTISEMENT

அரியலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா கலந்து கொண்டு, 160 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு 11 வகையான சீா் பொருள்கள் மற்றும் 5 வகை கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் க.அன்பரசி, வட்டார மருத்துவ அலுவலா் காயத்ரி, வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் ம.மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT