அரியலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த பெரியதிருக்கோணம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் சாா்பு - ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலான காவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். மேலும், அவசரகால உதவி எண்கள் 100,1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT