அரியலூர்

ஆவின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு திருச்சி ஆவின் நிறுவனம் சாா்பில் கறவை மாடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஆவின் மருத்துவ குழுவினா் பங்கேற்று, கூட்டுறவு சங்கத்தில் பால் கறக்கும் மாடுகளுக்கு பெரியம்மை நோய் இருக்கிா என பரிசோதனை செய்தனா். மேலும் , பெரியம்மை கண்டறியப்பட்டால் வெளி மருந்து பூசும் முறைகள் பற்றி கறவையாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா். இம்முகாமின் மூலம் 60 மாடுகள் பயனடைந்தன. ஏற்பாடுகளை கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் கொளஞ்சிநாதன் , தலைவா் ஜமால்முகமது மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT