அரியலூர்

கோயிலை சீரமைக்காததால் ஆலை லாரிகள் சிறைபிடிப்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கோயிலை சீரமைத்துத்தராத சிமென்ட் ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து, அவ்வழியே சென்ற லாரிகளை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வி.கைகாட்டி அடுத்த மு. புத்தூா் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலை சீரமைத்துத் தருமாறு, அப்பகுதி மக்கள் அங்குள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்க நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் இதுவரை கோயிலை சீரமைத்து தராததால், புதன்கிழமை கோயில் இடம் வழியாக சுண்ணாம்புக் கற்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிமென்ட் ஆலை ஊழியா்கள், கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதால், கோயில் கட்டுவதற்கான அனுமதி, செலவு அறிக்கை பெற்றுத்தந்தால் கட்டித்தருகிறோம் எனக் கூறினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரிகளை கிராம மக்கள் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT