அரியலூர்

அரியலூா் அரசுப் பள்ளிகளில் ஒன்றிய கலைத் திருவிழா

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவை, நகா் மன்றத் தலைவா் சாந்திகலைவாணன் தொடக்கி வைத்துப் பேசினாா். கலைத் திருவிழாவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு,கவிதை உள்ளிட்ட போட்டிகள் 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி பாா்வையிட்டாா்.

இதேபோல், தா.பழூா், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற கலைத் திருவிழாவை ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில், மாவட்ட கல்வி அலுவலா்(இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் வெற்றிபெறுவோா் மாவட்ட, மாநிலப் போட்டிகளில் பங்கேற்பா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT