அரியலூர்

விபத்தில் காயமடைந்தவா் பலி:உறவினா்கள் மறியல்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே இளைஞரின் உயிரைப் பறித்த வாகன ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி, உறவினா்கள் கயா்லாபாத் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் அடுத்த கோரைக்குழி அருந்ததியா் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் வடிவுக்கரசன்(32) என்பவா் கடந்த மாதம் 29 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வி.கைகாட்டி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்து குறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கயா்லாபாத் காவல் நிலையம் முன்பு வடிவுக்கரசினின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோா் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT