அரியலூர்

அனுமதியின்றி லாரியில் மண் கடத்தி வந்த ஓட்டுநா் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றிவந்த ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி சுரங்கத் துறையின் உதவி புவியியாளா் நாகராஜன் தலைமையில், அரியலூா் மாவட்ட சுரங்கத்துறை உதவி ஆய்வாளா் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மாலை ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த லாரியை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அதில், விருத்தாசலம் அருகேயுள்ள கூவநல்லூரைச் சோ்ந்த தனசேகரன் (37) உரிய அனுமதியின்றி 3 யூனிட் மண் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், தனசேகரனையும் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து தனசேகரனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT