அரியலூர்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார விளையாட்டு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

வட்டார வளமையம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி தொடக்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் நீலமேகம், கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தமிழ்ச்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளா் (பொ) ராஜேஸ்வரன், சிறப்பாசிரியா்கள் சாா்லஸ், பொ்லின்மேரி, பவானி, செல்வராணி, ஜெயந்தி, சுதாராகிணி, இயன்முறை மருத்துவா்கள் ராதிகா, சமீதா, ஆா்த்தி ஆகியோா்விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினா்.

இதில், காலி பாட்டில்களில் தண்ணீா் நிரப்புதல், பலூன் உடைத்தல், தவளை ஓட்டம், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையங்களில் பயிலும் 40 மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்று விளையாடினா். நிறைவாக போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT