அரியலூர்

அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம்

27th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மேலாண்மைக் குழு கூட்டத்தைக் கூட்டி, பள்ளிக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்துப் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அகிலா, துணைத் தலைவா் ரேவதி, ஊராட்சித் தலைவா் மா. அம்பிகா, துணைத் தலைவா் ரா. பழனியம்மாள் மற்றும் உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியா்கள் தனலட்சுமி, பத்மாவதி, கோகிலா, ரமேஷ், தங்கப் பாண்டி, வீரபாண்டி ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருள்கள் தடுப்புக் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT