அரியலூர்

5 கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் 5 கிராமங்களிலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குவாகம் அடுத்த சோழம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகா் மற்றும் கருப்புசாமி கோயில், கோட்டைக்காடு மாரியம்மன் கோயில், வைப்பம் மாரியம்மன் கோயில், கோவில்எசனை ஹரிஹரபுத்ர சுவாமி, மத்துமடக்கி மஹாசக்தி மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை மாலை அந்தந்தக் கோயில் வளாகங்களில் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 10 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்று மேற்கண்ட கோயில்களின் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT