அரியலூர்

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் கைப்பேசி எண், ஆதாா் எண் இணைப்பு அவசியம்

DIN

அரியலூா் மாவட்டத்தில், பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும்.

இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தற்போது 11 ஆவது தவணை தொகை வரவு வைக்கப்படுகிறது.

வருங்காலங்களில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெற தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைத்துள்ள விவரத்தை பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம். ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகலாம். இதற்கு கட்டணமாக ரூ.15 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT