அரியலூர்

100 நாள் வேலை, குடிநீா் கேட்டு திருமானூா் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

18th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், முடிகொண்டான் கிராம மக்கள் தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி, திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மஞ்சமேடு ஊராட்சிக்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தில் 100 நாள்கள் வேலை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படவில்லை. ஊராட்சி சாா்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரும் உவா்ப்பாக உள்ளது. வீட்டு வரி, குடிநீா் வரி அனைத்தும் செலுத்தினால் 100 நாள்கள் பணி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் உரிய வரி பணத்தை கட்டியும் அவா்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. எனவே, 100 நாள்கள் வேலை மற்றும் தரமான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை வைத்தனா்.

அப்போது, பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லதா உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT