அரியலூர்

செந்துறை சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்

DIN

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.129 கோடி மதிப்பீட்டில் அரியலூா்-செந்துறை சாலை விரிவாக்கப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அரியலூா் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற பூமிபூஜையில் கலந்து கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், சாலை விரிவாக்கப் பணியைத் தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் - செந்துறை இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக

17 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்தச் சாலையில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூா், ராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலையோரங்களில் மழைநீா் வடிகால் சுமாா் 6.90 கிலோ மீட்டா் நீளத்துக்கு கட்டப்படும். மேலும், 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் 38 சிறுபாலங்கள் புதிதாக கட்டப்படும். சாலையின் இருபுறமும் 3,400 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாக அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலை விரிவாக்கப் பணி 21 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச. கலைவாணி, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் உத்தாண்டி, உதவி கோட்டப் பொறியாளா் சிட்டிபாபு, உதவி பொறியாளா் இளையபிரபு, வட்டாட்சியா் குமரையா மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நினைவுச்சின்னம் திறப்பு

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நினைவுச் சின்னத்தையும், அத்துடன் ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பகுதியளவு மண்ணில் புதைந்த நிலையில் இருந்த இந்தியா விடுதலை பெற்ற 25 ஆம் வெள்ளி விழாவையொட்டி நிறுவப்பட்ட நினைவுக் கல்லையும் திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT