அரியலூர்

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி

18th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளை (ஆக.20) முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைமையிடத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா் தலைமையில் தலைமையிடத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லதா, சக்திவேல் ஆகியோா் முன்னிலையில், அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதேபோல், தா. பழூா், செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், அரியலூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஆட்சியரகத்தில் துறை அலுவலகங்களிலும், மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT