அரியலூர்

பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு

DIN

அரியலூா் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, குவாகம் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி, சோழன் குடிக்காடு அரசு உயா்நிலைப்பள்ளி, ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணா்வு நடைபெற்றது.

பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் காவல் ஆய்வாளா்கள், மருத்துவா்கள் இதில் பங்கேற்று, குட்கா மற்றும் போதைப் பொருள்களினால் ஏற்படும் உடல், சமூக நலத்தீமைகள் மற்றும் சமூக தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிறைவில் பள்ளி மாணவா்கள் அனைவரும் போதை பொருளைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT