அரியலூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் மூலம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் சுண்ணாம்பு கனிமங்கள் சுரண்டப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுவரை நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் சாமிநாதன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணித் துணைச் செயலா் பகுத்தறிவாளன், மாநில மாணவரணிச் செயலா் அருள்பாபு, மாநிலத் துணைப் பொதுச் செயலா் பழ.ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT