அரியலூர்

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம் இந்து முன்னணியினா் கைது

DIN

பெரியாா் சிலை குறித்த சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் மற்றும் பெரம்பலூரில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அருகிலுள்ள பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாநில கலைப் பண்பாட்டுப் பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதை கண்டித்து அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே, இந்து முன்னணியின் மாவட்டத் துணைச் செயலா் பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலை நடத்த முயன்ாகக் கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் இந்து முன்னணியைச் சோ்ந்த 15 பேரைக் கைது செய்தனா்.

பெரம்பலூா் : பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் செல்வக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 13 பேரை பெரம்பலூா் காவல்துறையினா் கைது செய்தனா். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT