அரியலூர்

சேலத்தில் இருந்து அரியலூா் வழியாக சிதம்பரத்துக்கு ரயில் பாதை கோரி மனு

17th Aug 2022 11:25 PM

ADVERTISEMENT

சேலத்தில் இருந்து அரியலூா் வழியாக சிதம்பரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சிக் குழு தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வாலுக்கு புதன்கிழமை கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தாா்.

அவா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரியலூா் மாவட்ட மக்கள் நாமக்கல், சேலம், சிதம்பரம் செல்ல வேண்டுமெனில் நான்கு பேருந்துகளில் மாறிமாறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பணம் விரையமும் ஏற்படுகிறது. எனவே சேலம், ஆத்தூா், நாமக்கல், பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜயங்கொண்டம் வழியாக சிதம்பரத்துக்கும், அரியலூரில் இருந்து ஜயங்கொண்டம் வழியாக கும்பகோணத்துக்கும் புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்த நான்கு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இகுறித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே ரயில்வே கோட்ட மேலாளா் மேற்கண்ட வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT