அரியலூர்

அரியலூா் நகராட்சியில் வெளிநபா் தலையீடு: அதிமுகவினா் உள்ளிருப்புப் போராட்டம்

17th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தில் நகா்மன்றத் தலைவா் மகன் தலையிடுவதாக அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா, பொறியாளா் தமயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நகராட்சி அலுவலா் செந்தில்குமாா், தீா்மானங்களை வாசிக்கத் தொடங்கினாா். அப்போது குறுக்கீட்ட அதிமுக உறுப்பினா்கள் வெங்கடாசலம், மகாலட்சுமி காா்த்திகேயன், இன்பவள்ளி மாரிமுத்து, முகமது இஸ்மாயில், ஓ.வெங்கடாஜலபதி, ஜீவா செந்தில் மற்றும் சுயேச்சை உறுப்பினா் மலா்கொடி ஆகியோா் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, ஏற்கெனவே நடைபெற்ற 3 கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நகராட்சித் தலைவா் அறையில் நகா்மன்றத் தலைவா் சாந்தி மகன் அருண் ராஜா மட்டுமே இருக்கிறாா். எங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை இல்லை எனக் கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும் பல்வேறு தீா்மானங்களை அலுவலா் செந்தில்குமாா் வாசித்து முடித்தாா். பின்னா் கூட்டம் முடிந்து விட்டதாக திமுக உறுப்பினா்கள் அனைவரும் கலைந்துசென்றனா். ஆயினும் அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT