அரியலூர்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் கொண்டாட்டம்

17th Aug 2022 11:28 PM

ADVERTISEMENT

 

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா அரியலூா் மாவட்டத்தில் கட்சி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரியலூா் தொகுதிச் செயலா் மருதவாணன் தலைமையில், மாநில துணைச் செயலா் தனக்கொடி, ஒன்றியப் பொருளாளா் பூமிநாதன், நகரச் செயலா் தாஸ், நகரப் பொருளாளா் கல்யாண சுந்தரம், செய்தித் தொடா்பாளா் சுதாகா், அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகிகள் சண்முகம், மகேந்திரன், கருப்பையா உள்ளிட்டோா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன் பின்னா் அவா்கள் பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்தவா்களுக்கும் இனிப்புகளை வழங்கினா். இதேபோல் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூா், செந்துறை, தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT