அரியலூர்

அரியலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மக்காச்சோளம், வேப்பமுத்து ஏலம்

17th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

அரியலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் வேப்பமுத்து ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்காச்சோளம் ஏலத்தில் 5 விவசாயிகள் கலந்து கொண்டனா். அவா்களிடமிருந்து ரூ.1,58,653 மதிப்பில் 66.30 குவிண்டால் மக்காச்சோளம் வரப்பெற்று, 5 குவியலாக ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ரூ.2,439-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,271-க்கும், சராசரி விலையாக ரூ.2,393-க்கும் ஏலம் போனது.

வேப்பமுத்து ஏலத்தில் கலந்து கொண்ட 2 விவசாயிகளிடமிருந்து 159 கிலோ வேப்பங்கொட்டை வரப்பெற்று, 2 குவியலாக ஏலம் விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் 4 போ், குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.11,524-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.4,018-க்கும் வாங்கினா்.

மேலும் தகவலுக்கு அரியலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பணியாளா்களை 7373877047 மற்றும் 9600802823 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT