அரியலூர்

அரியலூா் அரசுப் பள்ளியில் சில மணிநேரத்திலேயே இறக்கப்பட்ட தேசியக்கொடி! வைரலானதால் மீண்டும் ஏற்றப்பட்டது

16th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி, சிறிதுநேரத்திலேயே இறக்கிவைக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பேசுபொருளானது.

அரியலூரில் இருந்து சுமாா் 13 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அரியலூரைச் சோ்ந்த செல்வம் என்பவா் தலைமையாசிரியராகப் பணிபுரிகிறாா். இப்பள்ளியில் மேலும் 9 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி திங்கள்கிழமை காலை பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமையாசிரியா் செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், தலைமையாசிரியா் செல்வம் தேசியக்கொடியை இறக்கி பள்ளியின் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டாா். காலை 11 மணியளவிலேயே தேசியக்கொடியின்றி உள்ள பள்ளிக்கூடக் கொடிக்கம்பம் குறித்து சிலா் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது வைரலானது.

இதையறிந்த பள்ளித் தலைமையாசிரியா் செல்வம் மீண்டும் பள்ளிக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இதுகுறித்து, தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது, மாலையில் தேசியக்கொடியை இறக்கிவைக்கும் வகையில் யாரும் இல்லை. மேலும் நானும் வெளியூா் என்பதால் சுதந்திர தின நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் தேசியக் கொடியை இறக்கிவைத்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT