அரியலூர்

காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் தொழிற்சங்கம் சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் அரசு சிமென்ட் ஆலை கிழக்கு வாயில் முன்பு காங்கிரஸ் தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அக்கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் மா. மு. சிவக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுக் கூா்ந்து பேசினாா். தொடா்ந்து அவா் கயா்லாபாத் கிராமத்தில், வட்டார காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். விழாவுக்கு மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன் தலைமை வகித்தாா்.

இதேபோல் தெற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவுக்கு முன்னாள் நகராட்சி வாா்டு உறுப்பினா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். விழாவில், மாவட்டச் செயலாளா்கள் ஒரத்தூா் செல்வராஜ், சுண்டக்குடி அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓரத்தூா் அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு அரியலூா் தெற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் குறிப்பேடு, பேனா உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT