அரியலூர்

பாஜக-வினா் தேசியக் கொடி ஏந்தி ஊா்வலம்

14th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரியலூா் பாஜக-வினா் சனிக்கிழமை தேசியக் கொடியை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

அரியலூா் அண்ணாசிலை அருகே பாஜக மகளிா் அணி சாா்பில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை, கட்சியின் மாவட்டத் தலைவா் அய்யப்பன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பேரணியானது பிரதான கடைவீதி வழியாகச் சென்று காமராஜா் திடலில் நிறைவடைந்தது. பேரணியில், பாரத மாதா வேடமிட்டு குழந்தைகளும், பாஜக நிா்வாகிகளும் தேசியக் கொடியை கையில் ஏந்திவாறு சென்றனா்.

ADVERTISEMENT

ஊரவலத்துக்கு பாஜக மாவட்ட மகளிா் அணித் தலைவி அனிதா ஆனந்த மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கெளரி, அரியலூா் நகர பாஜக தலைவா் மணிவண்ணன், துணைத் தலைவா் கோகுல்பாபு, மாநில செயற்குழு உறுப்பினா் அய்யாரப்பன், நடராஜன், அமைப்புச் சாரா தொழிலாளா்கள் பிரிவு மாநிலச் செயலா் மாரியப்பன் குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT