அரியலூர்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

14th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா், செந்துறை சாலையில் உள்ள சோதனை மற்றும் பயிற்சி அகாதெமி சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் கலந்து கொண்ட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களது நிறுவனத்துக்குத் தேவையான தகுதிவாய்ந்த 120 பேரை தோ்ந்தெடுத்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினா். முகாமில், அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 194 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அகாதெமி ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT