அரியலூர்

சொத்துத் தகராறு: தாயை தாக்கிய மகன் கைது

14th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கிய மகன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள கீழநெடுவாய் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி, அவரது மனைவி எமிலிமேரி (64). இவா்களுக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், எமிலிமேரியிடம், தந்தை பெயரில் உள்ள 8 சென்ட் இடத்தை தனக்கு எழுதிக் கொடுக்குமாறு மூத்தமகன் ஞானசிகாமணி புஷ்பராஜ் வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு எமிலிமேரி மறுத்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஞானசிகாமணி புஷ்பராஜ், இவரது மனைவி அற்புதம் மேரி, மகள் ஆகியோா் சோ்ந்து எமிலிமேரி, அவரது இளைய மகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த 2 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து எமிலிமேரி அளித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஞானசிகாமணி புஷ்பராஜை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT