அரியலூர்

செந்துறையில் காங்கிரஸாா் பாதயாத்திரை

14th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், செந்துறையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை தேசியக் கொடியை ஏந்தி பாதயாத்திரையில் ஈடுபட்டனா்.

இந்த பாதயாத்திரைக்கு பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மணிரத்னம் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறினாா்.

வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ராஜேந்திரன், மணிகண்டன், வேப்பந்தட்டை வட்டாரத் தலைவா்கள் சின்னசாமி, பாது, அரும்பாவூா் நகரத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பாதயாத்திரை செந்துறை கடைவீதியில் தொடங்கி அனைத்து வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT