அரியலூர்

லஞ்சம்: ஏலாக்குறிச்சி ஆா்ஐ, விஏஓ கைது

13th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருமானூா் அருகேயுள்ள செங்கராயன்கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் (38). இவருக்கு பட்டா மாற்றம் செய்து தர ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா் (42), விஏஓ கோவிந்தராஜ் (40) ஆகியோா் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனா்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சச்சிதானந்தம், அரியலூா் ஊழல் தடுப்புத் துறை போலீஸாரை அணுக, அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.20,000-ஐ வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், விஏஓ கோவிந்தராஜ் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை கொடுத்தாா்.

அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT