அரியலூர்

விழிப்புணா்வு பிரசாரம்; இளைஞருக்கு வரவேற்பு

13th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த பைக் மூலம் விழிப்புணா்வுப் பயணம் மேற்கொண்டு அரியலூா் வந்த இளைஞருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவேக். சென்னையிலுள்ள தனியாா் நிறுவன ஊழியரான இவா் ஜூலை 19 ஆம் தேதி சென்னையில் தனது பைக் பிரசார பயணத்தைத் தொடங்கி ஜயங்கொண்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

அப்போது ரோட்டரி சங்கம் சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெயராமன், நிா்வாக செயலா் குமணன், முன்னாள் தலைவா்கள் கிருபாநிதி, செந்தில்வேல், சுப்பிமணியம் உள்ளிட்டோா் விவேக்குக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT