அரியலூர்

அஸ்தினாபுரத்தில் விலையில்லா சைக்கிள்

13th Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் வேல்முருகன் தலைமை வகித்தாா். விழாவில், எம்எல்ஏ கு. சின்னப்பா மாணவ,மாணவிகள் 104 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். ஊராட்சித் தலைவா் நடராஜன் மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT