அரியலூர்

மகளிா் குழுக்கள், மாணவா்களுக்கு தேசியக் கொடி

13th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

அரியலூரில் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாணவா்களுக்கு தேசிய கொடிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட விளையாட்ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி மகளிா் சுயஉதவிக்குழு சாா்பில் வரையப்பட்ட இந்திய வரைபடத்தை பாா்வையிட்டு, மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கும், அரசு அலுவலா்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தேசியக் கொடிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் சிவகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT