அரியலூர்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

13th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

ஜயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17.32 லட்சத்தில் கட்டப்பட்ட இரு புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் புதிய வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்து, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், வட்டாரக் கல்வி அலுவலா் மதலைராஜ், கூடுதல் வட்டார கல்வி அலுவலா் ராசாத்தி, பள்ளி தலைமை ஆசிரியா் கீதா, ஊராட்சித் தலைவா் ஜெயந்தி தெய்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT