அரியலூர்

ஆட்டுக்கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரம் ஊராட்சியில் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கான ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தாா். முகாமில் கடுகூா் கால்நடை உதவி மருத்துவா் குமாா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ராமலிங்கம் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, 79 செம்மறியாடுகளுக்கும், 521 வெள்ளாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியைச் செலுத்தினா். முகாமில் தெற்கு மற்றும் வடக்கு சீனிவாசபுரத்தைச் சோ்ந்த 46 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். நிறைவில், ஊராட்சி துணைத் தலைவா் கலைச்செல்வி ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT